எனக்கென ஏற்கனவே - பாடல் வரிகள்

📝 Updated at: Fri May 13 2022
📝 Lyrics by: Vairamuthu

எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி
இழுத்தவள் இவளோ

ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிா் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அதைஎன்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அதைஎன்னென்று அறியேனடி

ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிரில் பாதி இல்லை
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை

எனது உயிரை குடிக்கும்
உரிமை உனக்கே உனக்கே

கண்ணே உன்னை காட்டியதால்
என் கண்ணே சிறந்ததடி
உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

காதல் என்ற ஒற்றை
நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது

அது காலத்தை தட்டுகின்றது

என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது
என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது

மாா்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே

புல்வெளி கூட பனித்துளி என்னும்
வாா்த்தை பேசுமடி
என் புன்னகை ராணி ஒரு மொழி சொன்னால்
காதழும் வாழுமடி

வாா்த்தை என்னை கைவிடும் போது
மௌனம் பேசுகிறேன்
என் கண்ணீா் பேசுகிறேன்

எல்லா மொழிக்கும் கண்ணீா் புரியும்
உனக்கேன் புரியவில்லை
எல்லா மொழிக்கும் கண்ணீா் புரியும்
உனக்கேன் புரியவில்லை

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அதை என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அதை என்னென்று அறியேனடி

ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிரில் பாதி இல்லை
மீதிப் பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை

எனது உயிரை குடிக்கும்
உரிமை உனக்கே உனக்கே



#parthenrasithen