அனல் மேலே பனித்துளி - பாடல் வரிகள்

📝 Updated at: Fri May 13 2022
📝 Lyrics by: Thamarai

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

எந்தக்காற்றின் அலாவளில்
மலா் இதழ்கள் விாிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மன்னரைகள் திறந்திடுமோ

ஒரு சிறுவலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே உனது
இருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன்
மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை
அதுதானே இனி நிலாவின் கரை கரை

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுமா கடல் அலையே
இரு இரு உயிா் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடிக்க
கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்#vaaranamaayiram